ஆத்மயோக ஆசான் என்பவர் கொரோனாவை தடுப்பதற்கு சாம்பிராணி புகை போடுங்கள் என்று கூறியதற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொரானாவை ஒழிக்க சாம்பிராணி புகை! ஆத்மயோகி ஆசான் ஜி கொளுத்திப் போட்ட புதுத் தகவல்! ஆனால்?

இந்தியா முழுவதிலும் ஆத்மயோகா பவுண்டேஷன் இயங்கி வருகிறது. இதன் தலைவரான ஆசான் ஜி, அறிவியல் உடன் கூடிய ஆன்மீக சொற்பொழிவுகள் வழங்கி வருபவராவார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அதில் அவர், "இந்த வைரஸை அழிப்பதற்கான எளிய வழிமுறை நம் நாட்டில் உள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலும் ஈரத்தில் இருந்து பரவும் தன்மை உடையது. ஆகையால் ஈரத்தை வெகுவிரைவில் உலர வைப்பதற்காக வீடு முழுவதும் சாம்பிராணி புகையை பயன்படுத்துங்கள்" என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோவானது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வெகு விரைவாக பரவ தொடங்கியது. இந்த வீடியோவானது பல அரசு மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பலரும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
அதாவது, இந்த வைரஸ் சாம்பிராணி புகையினால் அழிந்துவிடும் என்று எந்த ஒரு ஆய்வறிக்கையும் கூறவில்லை. மக்களுக்கு தவறான வழிகளை போதிக்க வேண்டாம். மேலும் சாம்பிராணி புகையினால் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கவே செய்யும் என்றும் பல அரசு மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆகையால் மக்கள் தெளிவில்லாமல் இதுபோன்ற வீடியோக்களை நம்ப வேண்டாம் இன்று சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.