கொரோனா ஊரடங்கு..! வீட்ல என்னடா பண்றீங்க? நிறைய பெண்கள் கர்ப்பமாக ஹாஸ்பிடல் வர்றாங்க! ! இளம் பெண் டாக்டர் சொன்ன தகவல்!

பிரபல திரைப்பட பின்னணி பாடகர்கள் மற்றும் நாட்டுப்புற பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதியினரின் மகள் கொரோனா விழிப்புணர்வு பற்றி வித்தியாசமாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.


சீனாவின் வுகான் மாநிலத்தில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல பின்னணி மற்றும் நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி ஆகியோரின் மகள் பல்லவி அகர்வால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வேடிக்கையான மற்றும் வித்தியாசமான தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மருத்துவராக பணியாற்றி வரும் இவர் வேறு சில மருத்துவருடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் ,சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் வரும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் பணிபுரிந்துவரும் மருத்துவமனையில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிகமாக வருவதாக கூறியுள்ளார்.

இது குறித்த தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், அன்பை உருவாக்குங்கள், குழந்தையை அல்ல! பெண்கள் கர்ப்பமாவது தற்போது அதிகரித்துள்ளது! என்னடா பண்றீங்க! என்ற ஒரு வேடிக்கையான பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.