மூத்த மகள் என்ன ஆனாள்? புஷ்பவனம் குப்புசாமி கூறும் ஒரு தகவல்! அனிதா குப்புசாமி இன்னொரு தகவல்! என்ன தான் நடக்கிறது அவர்கள் வீட்டில்?

நாட்டுப்புற பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி இவர்களின் மகள் காணவில்லை என்ற பரபரப்புத் தகவல் சமீபத்தில் வெளியாகியது.


புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி தம்பதியினரின் மூத்த மகள் பல்லவி. மருத்துவப் படிப்பை முடித்துள்ள இவரை காணவில்லை என்று புஷ்பவனம் குப்புசாமி தரப்பிலிருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகவும், புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியது.

மேலும் போலீசாரிடம் அளித்த புகாரில் தனது மகள் பல்லவி அவளது சகோதரியிடம் சண்டை போட்டுக்கொண்டு கோவத்தில் எங்கேயோ சென்று விட்டார் . சென்றவர் மீண்டும் வரவில்லை என புகார் அளித்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் அனிதா குப்புசாமி தனது மகள் நீட் கோச்சிங் காக சென்றிருக்கிறார் யார் இப்படி தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள் என்று தெரியவில்லை என மறுத்துள்ளார். இதுகுறித்து புஷ்பவனம் குப்புசாமி கூறுகையில் தனது மகள் பல்லவி அவளது ஃபிரன்ட் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.

போகிற வழியில் மொபைல் தண்ணிரில் விழுந்து விட்டது. இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை இதனால் என் மனைவி போய்விட்டாள். இப்போது எல்லாம் சரியாகி விட்டது நான் காவல் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும் முரண்பாடான தகவலை கூறியுள்ளார். 

இந்நிலையில் புகார் செய்ததாக கூறப்படுவதற்கு முன்பே தனது இன்ஸ்டகிரம் ஆக்கவுண்ட் ஆபீயூசர் என்று ஒரு தொலைபேசி எண்ணை பதிவு செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் தற்போது அந்த பதிவை நீக்கிவிட்டு நான் பாதுகாப்பாக இருக்கிறேன் வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் எனவும் அதில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மகள் விவகாரத்தில் புஷ்பவனம் ஒரு கருத்தும் அவரது மனைவி இன்னொன்றும் கூற மகள் பல்லவியோ வேறு ஒன்றை கூறுகிறார். இதனால் அவர்கள் வீட்டில் என்ன தான் பிரச்சனை என பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.