மன்னன் அனந்தவர்மன் சோதகங்க தேவனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம்.
இந்த கோவிலின் மீது பறவைகள் பறப்பதில்லை, உட்காருவதில்லை! அறிவியலாளர்களும் திகைக்கும் மர்மம்! எங்கு உள்ளது தெரியுமா?
மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின் சிலை புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது. கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர் இக்கோயில் மூலவர்கள் ஆவர்.
பூரி ஜெகநாத் கோயிலின் கருவறையில் மரத்தால் ஆன மூலவர் சிலைகள் உள்ளன. உலகிலேயே ஒரே கோயில் இதுதான். 12 வருஷத்துக்கு ஒரு முறை நடைபெறும் நவகளேபரா திருவிழாவுக்கு ஒவ்வொரு முறையும் புதிய சிலைகள் செய்றாங்க. இந்த கோயில் கோபுரத்தின் நிழல் ஒருபோதும் கீழே விழுவதில்லை. சூரியன் சுட்டெரித்தாலும் கோபுரத்தின் நிழலை பார்க்கமுடியாது.
இந்த கோயிலின் மேல் பறவைகள் எதும் பறப்பதில்லை. அதே நேரத்தில் இந்த கோபுரத்தில் எந்த பறவைகளும் அமர்வதுமில்லை. இந்த கோபுரத்தின் மேலுள்ள சக்கரம் எங்கிருந்து பார்த்தாலும், ஒரே மாதிரி தான் இருக்குமாம்.
பொதுவாக காலையில் இருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும். இதன் கொடி எப்போதும் காற்றை எதிர்த்து பறக்கிறது.
கடற்கரையை ஒட்டி ஜெகந்நாதர் இருந்தாலும் கோவிலின் முதல் படியை தாண்டினால் கொஞ்சமும் கடல் அலைகளின் சத்தம் கேட்பதில்லை. தேர்த்திருவிழாவின் போது பூரி மன்னர் பரம்பரையினர் தங்கத் துடைப்பத்தைக் கொண்டு தெருவை சுத்தம் செய்கின்றனர். புதிய புதிய தேர்கள் செய்துகொண்டே இருக்கின்றனர். இது எப்படி சாத்தியம் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
ஆலயத்தின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும் ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை மீந்து போய் வீணானதும் நடந்தது இல்லை.
மடப்பள்ளியில் இன்று வரை, விறகு அடுப்பு வைத்து, மண் பானைகளைக் கொண்டுதான் சமைக்கிறார்கள். இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து, கீழே தீ மூட்டுகிறார்கள். இதி என்ன ஆச்சர்யம் என்றால் கீழ் பானையில் உள்ள அரிசி கடைசியாகவும், மேல் பானையில் உள்ள அரிசி முதலாவதாகவும், வேகும்.