கணவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்று தொடர்ந்த வழக்கில், கணவருக்கு விதித்த தண்டனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
என் கணவன் என்னை ரேப் செய்துவிட்டார்..! நீதிமன்றம் சென்ற மனைவி! ஆனால் அங்கு அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருப்பத்தூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் தன்னை கணவர் சிறுமியாக இருந்தபோது திருமணம் செய்தது மட்டுமின்றி தன்னுடைய விருப்பம் இல்லாமல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக குறிப்பிட்டார். இதையடுத்து சுப்பிரமணியன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை எதிர்த்து சுப்பிரமணியன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் அவருக்கு விதித்த தண்டனையை ரத்து செய்தது. தண்டனையை ரத்துசெய்ததற்கான காரணங்களை குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், கணவர் மீது புகார் அளித்த சமயத்தில் விவகாரத்திற்கும் மனைவி விண்ணப்பித்துள்ளார்.
மேலும் 18 வயதுக்கு பிறகே இருந்து புரிந்துணர்வோடு உடல்உறவு வைத்துக்கொண்டுள்ளதும் நிரூபணம் ஆகி உள்ளது. இதனால், சுப்பிரமணிக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மனைவியின் சொல்பேச்சை என்றும் கேட்டு நடந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. தவறினால் இதுபோன்ற புகார்களும் சிறைக்கு தள்ளும் சூழ்நிலை ஏற்படும்.