மதிப்பெண் குறைந்த மாணவிகளிடம் செக்ஸ் சீண்டல்! வசமாக சிக்கிய ஆசிரியர்!

பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்துவந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.


புனேவைச் சேர்ந்த அவருக்கு 43 வயது. கடந்த 6 மாதங்களாக, புனே ஜில்லா பரிஷத் பள்ளியில் பணிபுரிந்த அவர், மார்ச் 30ம் தேதியன்று, 6ம் வகுப்பில் படிக்கும் மாணவிகளை, தனது ஓய்வறைக்கு அழைத்துள்ளார். ஒருவர் பின் ஒருவராக, மாணவிகளை அழைத்து, பரீட்சையில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்கு தண்டனை எனக் கூறி, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

இதுபற்றி வெளியில் சொன்ன மாணவிகள், அந்த தண்டனையை செய்ய மிகவும் கூச்சமாகவும், மன உளைச்சலாகவும் உள்ளதென்று கூறியுள்ளனர். இதன்பேரில், உடனடியாக, மாவட்ட கல்வித்துறைக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விசாரணைநடத்தியதில், தண்டனை தருகிறேன் எனக் கூறி, மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக, தெரியவந்தது.

உடனே, போலீசாருக்கு தகவல் தரப்பட்டு, மாணவிகள், அதே பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்டோரின் வாக்குமூலம் பெறப்பட்டது. இதையடுத்து, அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.