2.0 படத்தில் அக்ஷய் குமார் "பக்ஷிராஜன்" வேடத்தில் இயற்கை ஆர்வலராக நடித்திருப்பார். நிஜ வாழ்விலும் சிலர் "பக்ஷிராஜன்" போன்று வாழ்ந்து வருகின்றனர்
70 வருடங்களாக மின்சாரமே இல்லாத வீடு! இயற்கைக்காக தனி ஆளாக போராடும் டாக்டர்!

79 வயது நிரம்பிய டாக்டர் பட்டம் பெற்ஹ பேராசிரியை ஒருவர் இயற்கை மீது தனக்குள்ள ஈர்ப்பின் காரணமாய் மின்சாரமின்றி வாழ்ந்து வருகிறார். இவரின் பெயர் ஹேமா ஷனே என்பதாகும். இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் புத்வர் பெத் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இவர் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தவில்லை.
இவரிடம் ஊடகத்தினர் நடத்திய பேட்டியில் அவர் மனம் திறந்து நிறைய பேசினார். மனிதனுக்கு வாழ உணவு,உடை, இருப்பிடம் ஆகியவையே அத்தியாவசியம் என்பதனால், மின்சாரத்தை உபயோகிக்க இல்லை என்று கூறினார். இவரளித்த பேட்டியின் மூலம் இயற்கையின் மீது இவர் கொண்டுள்ள காதலை நம்மால் அறிய முடிகிறது.
தான் இறந்த பிறகு, தன்னுடைய வீட்டினை தான் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கும், பறவைகளுக்குமே சொந்தம் என்று கூறியுள்ளார். இவ்வாறு வினோதமாக இருப்பதனால், இவரை பலர் பலவிதமான பார்ப்பதாகவும் ஆனால் அதைப்பற்றி எல்லாம் தான் கவலை படவில்லை என்றும் கூறியுள்ளார்.