அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்! அதிமுகவில் இணைகிறேன்! புகழேந்தி பரபரப்பு பேட்டி!

அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் நாடு திரும்பியதும் தான் அதிமுகவில் இணையப் போவதாக அமமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி கூறியிருக்கிறார்.


தஞ்சாவூரில் புகழேந்தி தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் தஞ்சையில் அமமுக கட்சியை கலைத்து விட்டதாகவும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.

இதனை மீறியும் இந்த கட்சியை நடத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று புகழேந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் தங்களைக் கேட்காமல் அமமுக கட்சியை அங்கீகரிக்க கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

பின்னர் பேசிய அவர் அதிமுக கட்சியில் ஸ்லீப்பர் செல் இருப்பதாக தினகரன் கூற சொன்னதால் நாங்கள் அவ்வாறு பொய் கூறினோம் என்று பத்திரிகையாளரிடம் கூறினார். தற்போது புகழேந்தி பேசியது வீடியோ பதிவானது அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.