பொள்ளாச்சி பெண்களுக்கு நீதி கேட்ட மாணவிகள் - கன்னத்தில் அறைந்து விரட்டிய எஸ்.பி! வைரல் வீடியோ!

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு நீதி கேட்டு புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரை எஸ்.பி. கன்னத்தில் அறைந்து கலைந்துபோகச் சொன்ன சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது


பொள்ளாச்சி சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போராட்டக் களங்களில் கல்லூரி மாணவ - மாணவியர்தான் முன்னணியில் நிற்கின்றனர். பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தைக் கண்டித்து புதுக்கோட்டை அரசுக் கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதில் மாணவர்  சங்க அமைப்பினரும் கலந்துகொண்டனர். அங்கு வந்த போலீசார் கலைந்து செல்ல வலியுறுத்தி மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மாணவிகள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். 

இதையடுத்து போலீசாருக்கும் மாணவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இடத்திற்கு வந்த எஸ்.பி  மாணவர் சங்க நிர்வாகி ஒருவரின் கன்னத்தில் அறைந்ததையடுத்து அங்கு கொந்தளிப்பு ஏற்பட்டது. 

மேலும் போலீசார் மாணவர்களை கைது செய்து வேனில் ஏற்ற முயன்றதையடுத்து மாணவிகள் வேனை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின் மாணவர்களை போலீசார் விடுவித்தனர் அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

அதே சமயம் எஸ்.பியால் மாணவர், மாணவி தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது-