உயிரியல் பூங்காவில் தாய் சிங்கம் செய்த விபரீத செயல்! பார்வையாளர்கள் அதிர்ச்சி!

உயிரியல் பூங்கா ஒன்றில் சிங்கம் செய்த செயலானது பார்வையாளர்களிடையே முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜெர்மனி நாட்டில் லிப்ஸீக் என்னும் நகரில் புகழ்மிக்க உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சில நாட்களுக்கு முன்னர் சிங்கமொன்று 2 அழகான குட்டிகளை ஈன்றது. தாய் சிங்கத்தின் பெயர் கிகாலி. இந்த செய்தியை கேள்விப்பட்ட அப்பகுதியில் இருந்த மக்கள் சிங்கத்தையும் குட்டிகளையும் பார்ப்பதற்கு உயிரியல் பூங்காவுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

சென்ற வெள்ளிக்கிழமையன்று குட்டிகளை ஈன்றது கிகாலி. 3 நாட்கள் கழித்து திங்கட்கிழமை அன்று தன் குட்டிகளை அதுவே விழுங்கியுள்ள சம்பவம் உயிரியல் பூங்காவில் இருந்தவர்களே பெரும் அச்சம் அடைய செய்துள்ளது. சிங்கத்தின் கொடூரமான செயலை கண்ட பொதுமக்கள் அவற்றை விவரிக்கவே முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை குறித்து சில  விளங்கியலாளர்கள் கூறுகையில், "தாய் சிங்கமானது தன் குட்டிகளின் உடல்நிலை மோசமாவதை அறியும்போது குட்டிகளை தானே சாப்பிட்டு விடும். அதேபோன்று முதல்முறையாக குட்டிகளை ஈன்றும் போது தாய்க்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் குட்டிகளை கொன்றுவிடும். கிகாலி தன்னுடைய குட்டிகளை கொன்றதால், குட்டிகளின் நிலையை அறிய முடியாமல் போய்விட்டது" என்று கூறினார்.

இந்த சம்பவமானது உயிரியல் பூங்காவில் சென்ற வாரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.