பொள்ளாச்சி ரேப் கும்பலை என்கவுண்டர்ல போடுங்க! கொந்தளிக்கும் பொதுஜனம்! என்ன செய்யப்போகிறது போலீஸ்?

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்து, சின்னாபின்னமாக்கியதுடன் நில்லாமல், அவர்களிடமே பணமும் பறித்த கும்பலைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் என்ற ரிஷ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நால்வரையும் போலீஸ் கைது செய்திருக்கிறது.


இது ஏதோ திடீரென நிகழ்ந்த விவகாரம் இல்லை என்பதுதான் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களாக இந்தக் கும்பல் கற்பழிப்பு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளது. ஒரு பெண்ணை மிரட்டி பணியவைத்து, அவள் மூலமே அடுத்த பெண்களையும் தூக்கிவந்து சீரழிப்பதும் இவர்களது ஸ்டைல். நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துக்கொள்வதால் போலீஸ்க்குச் செல்வதற்கு யாரும் தயாராக இல்லை.

குடும்பப் பெண்கள் தொடங்கி கல்லூரி, பள்ளி மாணவிகள் வரை இவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். இந்தப் பெண்களை அரசியல் வி.ஐ.பி.களுக்கு விருந்து வைத்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்திருக்கிறார்கள். இப்போது பிடிபட்டிருக்கும் கும்பலில் இன்னமும் 10க்கும் மேற்பட்ட  அயோக்கியர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.

இப்போது இந்த நால்வரும் உண்மையைக் கக்கிவிடக்கூடாது என்பதில் ஆளும் கட்சிப் புள்ளிகள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அதனால்தான் புகார் கொடுத்த பெண்ணை மிரட்டி, புகாரை வாபஸ் வாங்கவைக்கும் முயற்சி நடந்தது. புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை அடித்து மிரட்டினார்கள். உடனே மீண்டும் அந்தக் குடும்பம் போலீஸ்க்குப் போனது.

அண்ணனை அடித்தவர்களை போலீஸ் கைது செய்து சிறைக்கு அனுப்பியது. ஆனால், அவர்கள் ஜாமீனில் இன்று வெளியே வந்ததுதான் பெரிய சிக்கலை உருவாக்கியது. அதாவது கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்பதுபோல் செய்திகள் கசியவே தமிழகமே கொந்தளித்து எழுந்துவிட்டது. 

இதில் ஒரு விஷயமாகத்தான் குற்றவாளி திருநாவுக்கரசின் குடும்ப புகைப்படத்தை வலைதளத்தில் பரவவிட்டனர். குற்றவாளிகளுக்கு இதுதான் சரியான தண்டனை என்று மற்ற குற்றவாளிகளின் குடும்ப படத்தையும் வெளியிடும் வேலை நடக்கிறது.

இதுஒருபுறமிருக்க, ’குற்றவாளிகளை விசாரிக்கவே வேண்டாம், தப்பித்துப் போக நினைத்ததால் சுட்டுவிட்டோம் என்று என்கவுண்டர் செய்துவிடுங்கள்” என்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நிறையவே போன் வருகிறதாம். பொதுமக்களின் கோபத்தைப் பார்த்தால், எங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கிறது என்கிறார்கள் உயர் போலீஸ் அதிகாரிகள்.

கோவையில் பள்ளிக் குழந்தைகள் முஸ்கன், ரித்திக் ஆகியோரை கடத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி மோகனகிருஷ்ணனை போலீஸ் என்கவுண்டர் என்று சுட்டுக் கொன்றது.