ஆபாச ராஜாவுக்கு அடுத்து வந்துட்டார் தயாநிதி மாறன்.

தி.மு.க.வை ஆபாசத்தில் இருந்து பிரிக்கவே முடியாது என்பது மக்களுக்கு தெள்ளத் தெளிவாகவே தெரிந்துவிட்டது. ஆம், தயாநிதி மாறன் முன்னாள் முதலமைச்சர் குறித்து அவதூறான பேச்சுகளை பேசியதால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கிணத்துக்கடவு தொகுதி தி.மு.க. வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து நேற்று தயாநிதி மாறன் குறிச்சி பிரிவு இட்டேரி பகுதியில் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது வெறுப்பு அரசியல் செய்து இந்துக்களின் வாக்குளை பெற்று தமிழகத்தில் காலூன்ற பாஜக நினைக்கிறது என குற்றம்சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் உள்ள இந்துக்கள், இஸ்லாமியர்கள் இடையேயான பாச உறவை என்றும் பிரிக்க முடியாது என்றும் பேசிய அவர், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரத்தில் பேசினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அம்மா என்றும் மோடி எங்கள் அப்பா என்றும் கூறுகிறார். என்ன உறவு முறை என்று பாருங்கள் இதை சொன்னால் தவறு என்பார்கள் என பேசினார்.

ஏற்கனேவ முதலமைச்சர் தாய் குறித்து தவறான பேச்சுகளை பேசிய ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்த நிலையில், தற்போது தயாநிதி மாறனின் இந்த அவதூறு பேச்சு தமிழக மக்களிடையே மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்டாலினை நிம்மதிய இருக்கவே விடமாட்றாங்களே...