கஞ்சா அடிப்பதற்காக இளைஞர் ஒருவர் 3 கொலைகளை செய்திருப்பது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயசானவங்க தான் தடுக்கமாட்டாங்க..! ஒரு நாள் ஒரு கொலை..! சேலத்தில் சிக்கிய கொடூர சைக்கோ!

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே இந்த மாதம் தொடக்கத்தில் 3 பேர் ஒரே முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர். அதாவது 1-ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்டத்திலுள்ள மல்லசமுத்திரம் எனும் பகுதியை சேர்ந்த 65 வயதான பெரியசாமி என்பவரும், 2-ஆம் தேதியன்று வடமாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவரும், 3-ஆம் தேதியன்று அங்கமுத்து என்ற 60 வயதான முதியவரும் தலையில் கல் போடப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். தொடர் கொலைகள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 3 கொலைகளையும் ஒரே நபர் செய்து இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். நபரின் அடையாளங்களை துள்ளியமாக கண்டுபிடிப்பதற்காக சென்னை மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பிவைத்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
அப்போது, திண்டுக்கல்லிலுள்ள ஆத்தூருக்கு அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் ஆண்டிச்சாமி என்ற 19 வயது இளைஞன் வசித்து வந்துள்ளான். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 428 மதிப்பெண்கள் பெற்று நல்ல முறையில் தேர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அதன் பின்னர் அவருடைய வாழ்க்கை இருண்டு போனது. இவருடைய தந்தை, இவரையும் இவரது தாயாரையும் நடுத்தெருவில் தவிக்கவிட்டு வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டார்.
இதனால் இருவரும் உடல் மற்றும் மன ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டனர். தன்னுடைய தூக்கத்தை மறப்பதற்காக ஆண்டிச்சாமி நண்பர்களுடன் ஊர் ஊராக சென்று வந்துள்ளான். அப்போது கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளான்.
தாயார் எவ்வளவோ முயற்சித்தும் ஆண்டிச்சாமியை, இந்த போதை பழக்கத்திலிருந்து மீட்க இயலவில்லை. கஞ்சா அடிப்பதற்கு பணம் இல்லாதபோது பொதுமக்களிடம் திருடுவது, கொலை செய்வது போன்ற சமூக குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்.
கஞ்சா அடிப்பதற்கு பணமில்லாத காரணத்தினாலேயே, இவர் 3 கொலைகளை செய்துள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.