பெண்களை பார்த்தாலே எனக்கு அப்படி செய்யத் தோணும்! குன்னத்தை மிரட்டும் சைக்கோ வாலிபர்!

மாணவிகள் மற்றும் பெண்களின் கைகளை பிடித்து இழுத்த சைக்கோ இளைஞரை காப்பகத்தில் காவல்துறையினர் ஒப்படைக்கவுள்ளனர்.


திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு சம்பூர்ணம்-சண்முகம் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் வெங்கடாசலம் என்பவரை தத்தெடுத்து டிப்ளமா வரை படிக்க வைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் இறந்து போயினர்.

இந்நிலையில், இவர் மற்றொரு பகுதிக்கு சென்று வாடகை வீட்டில் வசித்து வந்தார். அங்கு அருகில் இருந்தோர் இவருக்கு உணவு கொடுத்து வந்தனர். இந்நிலையில் தனிமைப்படுத்த பட்டதால் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து கொண்டு ஏற்பட்ட கெட்ட சகவாசத்தால் மனநலம் பாதிக்கப்பட்டார். அவ்வழியே செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளின் கைகளை பிடித்து இழுத்து வந்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். காவல்துறையினர் வெங்கடாச்சலத்தின் மனநிலையை புரிந்துகொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, நேற்று மீண்டும் மாலை நேரத்தில் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த  கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களின் கைகளை பிடித்து இழுத்து சேட்டை செய்துள்ளார் தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.