குடியுரிமை மசோதாவிற்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு..! இந்திய தலைநகர் திகு..திகு..!

குடியுரிமைசட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லியில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.


பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்து, கிறிஸ்துவர், பார்ஸி, சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜோரோஸ்டியர்கள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றுகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவில் முஸ்லிம்களையும் ஈழத் தமிழர்களையும் ஏன் சேர்க்கவில்லை என்று போராட்டங்கள் நிலவி வருகின்றன. அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா , மணிப்பூர் ஆகிய பகுதிகளில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே மாணவ அமைப்பினர் செய்துவந்த போராட்டமானது இன்றைய தினம் கலவரமாக மாறி உள்ளது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக இனைய சேவையும் தொலைத்தொடர்பு சேவையும் நிறுத்தப்பட்டது. மேலும் அவர்களை ஒடுக்குவதற்காக ராணுவப் படையினரும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மக்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மணிப்பூர், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் மேற்கு வங்கத்தில் பல முஸ்லிம் அமைப்புகள் குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வன்முறை ஈடுபட்டதற்காக இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.