1 மணி நேரத்துக்கு ரூ.4000! அழைக்கும் இடத்திற்கு வந்தால் உல்லாசம்! மதுரையில் வலை விரிக்கும் லொகாண்டோ ஆப் பெண்கள்!

மதுரையில் காவல்துறை அதிகாரியை பாலியல் தொழிலுக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபகாலமாகவே மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து ஒரு சிலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த கும்பல் பெரிய நகரங்களை விட்டு விட்டு சின்ன சிறிய இடங்களை நோக்கி அதனுடைய பார்வை திரும்பியுள்ளது. இந்நிலையில் மதுரையில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி அவரை பாலியலில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பழனிகுமார் என்பவர் மதுரையில் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவின் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனில் "லாகேண்டோ(Locanto)" என்ற ஒரு செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார் . இந்த செயலின் மூலம் அவரது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது . அந்த குறுஞ்செய்தியில் "உங்களுக்கு உல்லாசமாக இருக்க வேண்டுமென்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் " என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த குறுஞ்செய்தியை பார்த்த காவல் அதிகாரி பழனிகுமார் அந்த கும்பலை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் . அப்பொழுது காவல்துறை அதிகாரி பழனிகுமார் அவர்களை வாடிக்கையாளர் என நினைத்து அந்த ஆபாச கும்பல் அவரிடம் எல்லா தகவல்களையும் கூறி உள்ளனர்.

அதாவது ஒரு மணி நேரத்திற்கு 4,000 ரூபாய் எனவும் ஒரு இரவிற்கு 12,000 ரூபாய் எனவும் விலை பேசியுள்ளனர். இதனையடுத்து அதிகாரி பழனி குமார் அவர்கள் கூறியதற்கு சம்மதம் தெரிவித்து அவர்கள் சொன்ன இடத்திற்கு போலீஸ் அதிகாரிகளுடன் சென்றுள்ளார்.

அந்த ஆபாச கும்பலின் இடத்தை சுற்றி வளைத்த போலீஸ் அதிகாரிகள் அய்யனார், சேகர், மனோஜ்குமார், நந்தினி உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கை விரைவு செய்து இந்த நான்கு பேரையும் தீவிரமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.