லிப்ஸ்டிக்கில் கேமரா! அரசியல் தலைவர்கள்! அதிகாரிகளை வளைத்த அழகிகள்! அடுத்தடுத்து வெளியாகும் 4000 அந்தரங்க வீடியோ!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிரபலமானவர்களை பாலியல் ரீதியில் வளைத்திழுத்த அழகிகள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


10 நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் தலைநகரான இந்தூரில் ஹர்பஜன்சிங் என்ற தொழிலதிபர் காவல்நிலையத்தில் அதிரவைக்கும் புகாரளித்தார்‌. அதாவது அவர் சில மாதங்களுக்கு முன்னர் ஷிவானி மற்றும் ப்ரீத்தி என்னும் 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை அவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை காண்பித்து பலமுறை அவரை மிரட்டியுள்ளனர். அவர் பலமுறை அவர்களுக்கு பணம் அளித்துள்ளார். இறுதியாக 3 கோடி ரூபாய் கேட்டு அவரை வற்புறுத்தி உள்ளனர்.

தன்னால் அவ்வளவு பணத்தை கொடுக்க இயலாது என்பதால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் காவல்துறையினர் ஒரு தனிப்படை அமைத்து 10 நாட்களுக்கு முன்னர் 4 பெண்கள் மற்றும் 1 ஆண் முதலிய குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்தனர்.

அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது தாங்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக், கண்ணாடிகள், செல்போன்கள் ஆகிய பொருட்களில் ரகசியமாக கேமராக்களை வைத்துள்ளனர். கேமராக்களின் மூலமாக அந்தரங்க காட்சிகளை வீடியோ எடுத்துள்ளனர்.

ரூமில் கேமரா வைத்தால் பெரும்புள்ளிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக அழகிகள் இந்த நூதனமான முறையை கையாண்டுள்ளனர். அமைச்சர்கள் முதல் மிகப் பெரிய தொழிலதிபர்கள் வரை தங்களுடைய லீலைகளை செய்துள்ளனர். இதுவரை அவர்களிடம் இருந்த 4000 வீடியோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்களை சிறையில் அடைத்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.