ரூ.1.5 கோடி வீட்டை எழுதிவாங்கிவிட்டு பெற்ற தந்தையை விரட்டிய மகன்! ஆனால் பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

புதுச்சேரியில் பெற்றோரிடம் அன்பாக பேசி சுமார் 1.5 கோடி மதிப்புள்ள வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிவிட்டு கணவர் மனைவி இருவரும் சேர்ந்து பெற்றோர்களை வெளியே அனுப்பி உள்ளனர்.


இந்நிலையில் அவரது தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதனை விசாரித்த ஆட்சியர் பெற்றோர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து தன் பெயருக்கு மாற்றி எழுதிய சொத்து பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சங்கரதாஸ் மற்றும் சிவகாமி தம்பதியினருக்கு அதே பகுதியில் சுமார் 1.5 கோடி மதிப்பிலான வீடு ஒன்று உள்ளது அவர்களுக்கு ராஜ்மோகன் 35, என்ற மகனும்  சவிதா 29,என்ற மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சரிதாவுக்கு திருமணம் செய்யப்பட்டு அவர் தனது கணவருடன் வசித்துவருகிறார்.

இந்நிலையில் அவரது மகன் ராஜ்மோகன் தான் வேலை பார்க்கும் இடத்தில் சாதனா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது இந்நிலையில் இருவரிடமும் காதலுக்கும் ஒப்புதல் அளித்து பெற்றோர்கள் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து ராஜ்மோகன் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் சந்தோஷமாக வசித்து வந்தார் இந்நிலையில் சில ஆண்டுகள் சென்ற நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜ்மோகன் தனியே தொழில் தொடங்குவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதற்கு லோன் வாங்க வீடு தன் பெயரில் மாற்றி கொடுக்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுள்ளார் அப்போது சங்கரதாஸ் தனது 1.5 கோடி மதிப்பிலான வீட்டை ராஜ்மோகன் பெயரில் மாற்றி கொடுத்துள்ளார். சிலநாட்கள் சென்ற நிலையில் ராஜ்மோகன் அவரது மனைவியும் பெற்றோர்களிடம் சரியாகப் பேசுவதும் இல்லை மற்றும் அடிக்கடி அவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதையடுத்து ராஜ்மோகன் பெற்றோர்களை தகாத வார்த்தைகள் கூறி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சங்கரதாஸ் தனது மகளின் வீட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி உள்ளார் அவர்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாக அவரது வீட்டில் இருந்தும் சங்கரதாஸ் வெளியே வந்து விட்டார் இந்நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சங்கரதாஸ் .

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார் , அந்தப் புகாரில் தன் மகன் தன்னை ஏமாற்றி 1.5 கோடி மதிப்பிலான வீட்டை அவரது பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் தன்னை மற்றும் தன் மனைவியையும் வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ராஜ்மோகன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்தபோது இந்த வீடு தன் பெயரில் தான் உள்ளது எனவும் தனது பெற்றோர்களை வீட்டில் சேர்த்துக் கொள்ள முடியாது எனவும் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சங்கரதாஸ் இடமிருந்து ஏமாற்றி பெறப்பட்ட வீட்டை அவரிடமே ஒப்படைக்க வேண்டுமென ராஜ்மோகனுக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் ராஜ்மோகன் இடமிருந்து வீடு திரும்பவும் சங்கரதாஸ் இடமே ஒப்படைக்கப்பட்டது. மற்றும் அவர் எழுதிக்கொடுத்த பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட சப் கலெக்டர் உத்தரவிட்டார் மற்றும் இந்த நகலை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.