லாபம் ஈட்டிய பங்குகள், தடுமாறிய நிறுவனங்கள் - இந்த வார வர்த்தகம் இம்புட்டுத்தான்

செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் பொதுத்துறை நிறுவன வங்கியான எஸ்பிஐ பங்குகள் 7 சதவீதம் உயர்ந்து 281.90 ரூபாயாக உள்ளது.


முறையே யெஸ் வங்கி 11 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 3 சதவீதமும் உயர்ந்தன. இந்த வாரத்தில் நிஃப்டி வங்கி குறியீடு 1 சதவீதம் உயர்ந்து 29,395 ஆக உள்ளது

வங்கிப் பங்குகள், குறிப்பாக தனியார் வங்கிகள் மேஜர் அளவிற்கு பெஞ்ச்மார்க்கை உயர்த்தியுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்குகள் 0.9 சதவீதம் அதிகரித்து ரூ .7,457.50 ஆக உள்ளது.

வாகன உற்பத்தியில் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 1,282 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ள டாடா மோட்டார்ஸின் பங்குகள் பிஎஸ்இயில் 4.87 சதவீதமாக சரிந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகிய பங்குகள் சுமார் 30 பங்குகளின் பெஞ்ச்மார்க்கில் சுமார் 140 புள்ளிகளைச் சேர்த்தன. அதேவேளையில் ஆனால் எச்.டி.எஃப்.சி, எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை இழப்புகளை சந்தித்துள்ளது.

பிஎஸ்இயில் கடந்த வெள்ளிக்கிழமை டிஷ் டிவி, சியண்ட், கம்மின்ஸ் இந்தியா, வோடபோன் ஐடியா மற்றும் டி.எச்.எஃப்.எல் என 161 பங்குகள் 52 வார வீழ்ச்சியை எட்டியுள்ளன.

பிஎஸ்இ தினசரி தரவரிசையின்படி 40 பங்குகள் MACD சிக்னல் கோட்டிற்குக் கீழே போய் உள்ளதால் டெக் மஹிந்திரா, எஸ்கார்ட்ஸ், கம்மின்ஸ் இந்தியா, வேர்ல்பூல், வருண் பெவரேஜஸ், பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் ஆகிய பங்குகளை "செல் ஆர்டர்" எனப்படும் விற்பனை‌ செய்ய அறிவுறுத்தப்படுகிறது.  

அடுத்ததாக பிசி ஜுவல்லரி 4.07 சதவீதமும் டைட்டன் 2.94 சதவீதமும் குறைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்செக்ஸ் 0.10 சதவீதம் உயர்ந்து 39,058.06 ஆக உள்ளது. நிஃப்டி 0.1 சதவிகிதம் உயர்ந்து11,583.90 ஆக முடிவடைந்தது.

யெஸ் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, டிசிஎஸ், எச்.சி.எல் டெக், மாருதி, பாரதி ஏர்டெல் மற்றும் இன்போசிஸ் ஆகியவை வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டின. அதேவேளையில் டாடா மோட்டார்ஸ், வேதாந்தா, எச்.டி.எஃப்.சி, கோட்டக் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் என்டிபிசி ஆகியவை நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 12 பைசா உயர்நது 70.90 ஆக உள்ளது. உலகளாவிய எண்ணெய் அளவுகோலான ப்ரெண்ட் கச்சா Feature ஒரு பீப்பாய்க்கு 0.18 சதவீதம் சரிந்து 61.56 டாலராக உள்ளது.

மணியன் கலியமூர்த்தி