64 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட இளம் பெண்! 63 வயது பேராசிரியருடன் நெருங்கிப் பழகியவருக்கு ஏற்பட்ட கொடூரம்! அதிர வைக்கும் காரணம்!

24 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவமானது ரஷ்ய நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்ற பல்கலைகழகம் இயங்கி வருகிறது. அந்நாட்டில் நிருபராகவும், பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் ஒலே சோகோலோவ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய வயது 63. இவருடைய மனைவி பள்ளி ஆசிரியை ஆவார். மனைவியின் மூலம் அனேஸ்டேசியா என்ற 16 வயது இளம்பெண்ணிடம் அறிமுகமாகியுள்ளார். பேராசிரியரின் மனைவி புற்றுநோயால் இறந்த பின்னர், 16 வயது மாணவியுடன் பேராசிரியர் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

அந்நாட்டு ஊடகங்கள் சில அவ்விருவருக்கும் திருமணம் நடைபெற்று விட்டதாக கூறுகின்றனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பேராசிரியர் மாணவியின் தலையில், 4 முறை துப்பாக்கியால் சுட்டு தள்ளியுள்ளார்.

அதன்பின்னர் அவருடைய உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி பிளாஸ்டிக் பைக்குள் அடைத்து மொய்க்கா ஆற்றில் வீச சென்றுள்ளார். இது குறித்த காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கின்றன. அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஒரு பையில் மாணவியின் இரு கைகளும் துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக பேராசிரியரின் வீட்டிற்கு சென்று ஆராய்ந்தபோது, மாணவியின் தலை மட்டும் தனியாக கிடந்துள்ளன. உடனடியாக காவல்துறையினர் பேராசிரியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வழக்கில் பேராசிரியருக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவமானது ரஷ்ய நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.