யோவ்..! பெண்கள் கக்கூஸ்ல உனக்கு என்ன வேலை! பேராசிரியர் செயலால் உள்ளே சென்று பார்த்த மாணவி..! அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கல்லூரி மாணவிகளின் கழிவறையில் கேமரா பொருத்தி பேராசிரியர் வீடியோ எடுத்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஐஐடி கல்லூரி தொடர்ந்து பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. தற்போது ஒரு புதிய சர்ச்சையானது பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது, ஐஐடி கல்லூரியில் விண்வெளி பொறியியல் துறை ஆய்வுக்கூடம் அமைந்துள்ளது. அந்த ஆய்வுக்கூடத்தின் பெண்கள் கழிவறையிலிருந்து நேற்று அதே துறையை சேர்ந்த ஆண் உதவி பேராசிரியர் ஒருவர் வெளியேறியுள்ளார். 

இதனை பார்த்த இளம்பெண் ஒருவர், சந்தேகமடைந்து கழிவறையை முழுவதிலும் சோதனை செய்துள்ளார். அப்போது தண்ணீர் குழாய்களுக்கு இடையே ஒரு செல்போன் பொருத்தப்பட்டிருந்தது. ஆண்கள் கழிவறையில் நின்றுகொண்டிருந்த அந்த உதவிப் பேராசிரியரிடம் அந்த கல்லூரி மாணவி விசாரித்தபோது, அது தன்னுடைய செல்போன் தான் என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

உடனடியாக மாணவி இந்த குற்றச்சாட்டை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக இதனை அப்பகுதி காவல்நிலையத்தில் தெரிவித்தனர். கல்லூரி வளாகத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த ஆண் உதவிப்பேராசிரியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

விசாரணையில் அவருடைய பெயர் சுபம் பானர்ஜி என்பது தெரியவந்துள்ளது. பெண்கள் கழிவறையில் செல்போன்களை மறைத்து வைத்து படம் எடுப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.