பேருந்து நிலையத்திற்குள் பேராசிரியைக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்! முகம் உடைந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன பரிதாபம்!

கல்லூரி பேராசிரியை மீது மர்ம நபர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியிருப்பது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவர் சாந்திமேரி. இவருடைய வயது 42. திருப்பூர்  மாவட்டத்தில் இயங்கி வரும் உடுமலை அரசு கலை கல்லூரியில் சுற்றுலா துறை பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த வார இறுதியில் தொடர் விடுமுறை வருவதால் சாந்திமேரி புதுச்சேரிக்கு செல்ல எண்ணினார்.

உடுமலை பேருந்து நிலையத்திற்கு அவர் சென்று கொண்டிருந்தார். ரங்கசாமி நகரில் திடீரென்று மர்ம நபர்கள் சிலர் சாந்திமேரியின் வழியை மறித்தனர். தங்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களால் சாந்தி மேரியை கடுமையாக தாக்கினர். தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காததால் சாந்திமேரி அலறியடித்து கத்த தொடங்கினார். அவர் கத்த தொடங்கியவுடன் பயந்து போன மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பொதுமக்கள் சாந்தி மேரியை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பொதுமக்கள் நிகழ்ந்த இந்த கோர தாக்குதலை அப்பகுதி காவல் நிலையத்தில் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மர்மநபர்கள் சாந்தி நெறியின் நகைகளுக்கான அவரை தாக்கினரா இல்லை முன்விரோதத்தில் மாணவர்கள் எவரேனும் கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தினர் என்பதை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.