விஜயை வைத்து படம் எடுத்து நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் -பார்ட் 3

விஜயை வைத்து ஷங்கரே படம் எடுத்தாலும் தயாரிப்பாளருக்கு என்ன நிலை ஏற்படும் என்பதை இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


நண்பன்: ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த முதல் படம். இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் உரிமையை வாங்கி விஜயை வைத்து ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. விஜய் – ஷங்கர் மார்கெட்டை நம்பி பிரமாண்ட பொருட்செலவில் உருவான படம் வெளியாகி ரசிகர்களை கவரவில்லை. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தால் ஜெமினி பிலிம் சர்க்யூட் அடுத்து படத்தை தயாரிக்கவில்லை.

மேலும் மதகஜராஜா என்கிற படத்தை எடுத்து முடித்தாலும் நண்பன் படத்தினால் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனையால் அந்த படத்தை தற்போது வரை வெளியிடவில்லை. இந்த அளவிற்கு விஜயின் நண்பன் மூலம் அடைந்த நஷ்டத்தை தொடர்ந்து ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் நிறுவனமும் தனது கடையை மூடிவிட்டு சென்றது.

தலைவா! இந்த படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். தனது அரசியல் ஆசையை தீர்த்துக் கொள்ள விஜய், இந்த படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின். தமிழ்திரையுலகின் முன்னணி பைனான்சியர் இவர். விஜய் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்த இவர் விஜயை ஹீரோவாக வைத்து தலைவா படத்தை எடுத்தார். அதன் பிறகு படத்தயாரிப்பு என்று யாராவது இவரிடம் கூறினால் கூட அலற ஆரம்பித்துவிடுவார்.

 அந்த அளவிற்கு தலைவா படத்தின் மூலம் மோசமான அனுபவமும், நஷ்டமும் இவருக்கு ஏற்பட்டது. நஷ்டத்தை விஜய் ஈடுகட்டுவார் என்று எதிர்பார்த்திருந்த ஜெயினுக்கு கடைசியில் கிடைத்தது ஏமாற்றம் தான். அதனால் தான் தலைவாவுக்கு பிறகு இவர் எந்த படத்தையும் எடுக்கவில்லை.

ஜில்லா! சூப்பர் குட் பிலிம்ஸ். திரைப்படங்களை விரும்பி பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த தயாரிப்பு நிறுவனம். குடும்ப பாங்கான திரைப்படங்களை மட்டுமே இந்த நிறுவனம் எடுத்து வந்தது. சூப்பர் குட் பிலிம்ஸ் உரிமையாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகன் ஜீவா ஹீரோவான பிறகு, படத்தயாரிப்பை குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயின் கால்ஷீட்டை வாங்கி ஜில்லா படத்தை எடுத்து முடித்தார் சவுத்ரி.~

படம் வெளியாகி தோல்வி. அதன் பிறகு படத்தயாரிப்புக்கு மூட்டை கட்டி வைத்து விட்டு மகனின் கால்ஷீட்டை பார்க்க ஆரம்பித்துவிட்டார் சவுத்ரி. வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்த சூப்பர் குட் பிலிம்ஸ்சை கூட திரையுலகை விட்டு விரட்டிய பெருமை விஜயையே சாரும். தயாரிப்பாளர்களிடம் விஜய் செய்த அட்ராசிட்டியின் கடைசி பாகம் ஒன்று இருக்கிறது. அதனையும் அடுத்து தவறாமல் படித்துவிடுங்கள்

விஜயால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் முதல் பார்ட்டை படிக்க இங்கே CLICK செய்யவும். அல்லது தொடர்புடைய செய்திகளை தேடவும்.

விஜயால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் 2வது பார்ட்டை படிக்க இங்கே CLICK செய்யவும். அல்லது தொடர்புடைய செய்திகளை தேடவும்.

விஜயால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் 4வது பார்ட்டை படிக்க இங்கே CLICK செய்யவும். அல்லது தொடர்புடைய செய்திகளை தேடவும்.