நடிகையின் முதல் உடலுறவு காட்சி! தயாரிப்பாளர் செய்த முகம் சுழிக்கும் செயல்!

பாலிவுட்டை பல புதுமுகங்கள் கலக்கி வருகின்றனர். ரசிகர்கள் இந்த புதுமுகங்களின் நடிப்பிற்கும், கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து தங்கள் இதயத்தில் சிலருக்கு கோயில் கட்டவும் துவங்கியுள்ளனர்.


இத்தகைய வரவேற்பு பெற்ற ஒரு புதுமுக நடிகை அஹானா குமாரா. இவர் நடித்து சில படங்கள் திரைக்கு வந்துள்ளன.  2017-ஆம் ஆண்டில் வெளியான சில இந்தி திரைப்படங்களில் மிகப்பெரிய ஆதரவையும், பாராட்டையும் பெற்ற படம் "லிப்ஸ்டிக் அன்டர் மை புர்கா"("lipstick under my burkah"). 

இந்த படத்தை அலங்கிரித்தா ஸ்ரிவட்ஸவா என்ற மிகப்பெரிய இயக்குநர் இயக்கினார். இந்த படத்தில் அஹானா குமாரா ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் வெளியான உடன் பெரும் வரவேற்பை பெற்றது. தன்னுடைய ஹீரோயின் கதாபாத்திரத்திற்காக அஹானா ரசிகர்களாலும், பல திரையுலக நண்பர்களினாலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் அஹானா குமாரா அளித்த ஒரு பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டியில் " லிப்ஸ்டிக் அன்டர் மை புர்கா"("lipstick under my burkah") படம் சிறப்பாக வந்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஆனால் சில தர்மசங்கடமான நிகழ்வுகளும் ஏற்பட்டன. 

படத்தில் தான் உடலுறவு காட்சியில் தான்  நடித்து கொண்டிருந்த போது தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா கூறிய கருத்து தன்னை மனதளவில் மிகவும் பாதித்ததாக கூறினார்.  முதன்முறையாக தான் உடலுறவு காட்சியில் நடித்ததாகவும், அப்போது படப்பிடிப்பு தளத்தில் குறைவான நபர்களே இருந்ததாகவும் அஹானா கூறினார்.

அப்போது திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தயாரிப்பாளர் உடலுறவு காட்சி குறித்து கமென்ட் செய்ததாகவும் இதனால் தான் தர்ம சங்கடம் அடைந்ததாகவும் அஹானா கூறியுள்ளார். இதுபாலிவுட் திரைப்பட வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.