பாலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளரான அர்பாஸ் கான் இத்தாலியன் மாடலான ஜார்ஜியா உடன் வெளிவந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
அம்மாவுக்கு 34 வயது நடிகர் மீது காதல்! அப்பா 29 வயது மாடலுடன் லிவிங் டுகெதர்! தவிக்கும் 17 வயது மகன்!
மும்பையில் உள்ள "இல் கபே" என்ற ஒரு ஹோட்டலுக்கு ஜார்ஜியா உடன் அர்பாஸ் கான் மற்றும் அவரது மகன் ஆர்ஹான் வந்திருந்தார்.
இத்தாலிய நாட்டு மாடலான ஜார்ஜியா தற்போது தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ் மூலம் கால்பதிக்க உள்ளார்.
"கரோலின் காமாட்சி" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் இல் ஜார்ஜியா முதல் முதலாக நாயகியாக அறிமுகமாகிறார்.
"கரோலின் காமாட்சி" என்ற தொடர் ஆக்ஷன் கலந்த காமெடி தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதே சமயம் அர்பாஸ் கான் "ஸ்ரீதேவி பங்களா" என்ற திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.
தயாரிப்பாளரான அர்பாஸ் கான் மற்றும் ஜார்ஜியா இருவரும் கடந்த ஒரு வருட காலமாக டேட்டிங் செய்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.