சூர்யாவின் என்ஜிகே வெற்றி படமா? தோல்வி படமா? தயாரிப்பாளர் வெளியிட்ட ஷாக் தகவல்!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த என் ஜி கே திரைப்படம் வெற்றி படமா அல்லது தோல்வி படமா என்பது பற்றி படத்தின் தயாரிப்பாளர் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார் .


தமிழ் சினிமா உலகில் முக்கியமான  தயாரிப்பாளர்களில்  ஒருவர் எஸ் ஆர் பிரபு . இவர் தயாரித்த திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமானவை . இவரது தயாரிப்பில் வெளிவந்த ஜோக்கர், அருவி ,தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் அனைத்தும் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன .

இந்நிலையில் இவரின் தயாரிப்பில் ஜோதிகாவின் நடிப்பில்  நேற்று வெளிவந்த ராட்சசி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .  இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் தயாரித்த என் ஜி கே திரைப்படமானது தோல்வி படம் என்று மீடியாக்களில் பேசப்பட்டுவந்தாலும்   தயாரிப்பாளரான எனக்கு இந்த படத்தின் மூலம் நல்ல லாபம்  கிடைத்துள்ளது .

இதேபோல நடிகர் கார்த்தி நடித்த காஷ்மோரா படமும் தோல்வி படம் என்று பல்வேறு தரப்பினரும் கூறப்பட்டு வந்த நிலையில் காஷ்மோரா திரைப்படம் வசூல் ரீதியில்  எனக்கு பல மடங்கு லாபத்தை ஈட்டித் தந்தது என்றும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தெரிவித்தார்.