மேடையில் விலகிய நடிகையின் சேலை..! ஓடி வந்த டைரக்டர்..! பிறகு அரங்கேறிய கிளுகிளு நிகழ்ச்சி..!

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ராம் கோபால் வர்மா இந்தி திரையுலகின் இளம் நடிகையான நைனா கங்குலி உடன் திரைப்படவிழாவில் ஆட்டம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


இந்தி திரையுலகின் பிரபல இளம் நடிகையான நைனா கங்குலி "பியூட்டிஃபுல்" என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபீரி ரிலீஸ் விழா கோலாகலமாக திரைத்துறையினர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற ராம்கோபால் வர்மா நடிகை நைனா கங்குலி உடன் இணைந்து மேடையில் நடனம் ஆடினார். 

ராம்கோபால் வர்மா ஒரு நடிகையுடன் மேடையில் ஆடுவது இதுவே முதல் முறை ஆகும். இதனைப் பார்த்த அங்கு வந்த மற்றவர்கள் ஆச்சரியத்தில் திகைத்து போனார்கள். தற்போது தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா மேடையில் நடிகையுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது .

பியூட்டிஃபுல் திரைப்படம் ரொமான்ஸ் மற்றும் காமெடி அடிப்படையில் உருவாக்கப்படும் திரைப்படமாகும். சமீபத்தில்தான் இந்த திரைப்படமானது தணிக்கை குழுவினர் இடமிருந்து "A" சான்றிதழைப் பெற்றது. மேலும் இந்த திரைப்படமானது வரும் புத்தாண்டிற்கு வெளியிடப்படும் என்றும் திரைப்பட குழுவினரால் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குனர் அகஸ்திய மஞ்சு இயக்கியுள்ளார். ரவிசங்கர் இந்த திரைப்படத்திற்கான இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.