தேர்தல் நிதி சுருட்டல்? கொதித்த ஸ்டாலின்! கேகேஎஸ்எஸ் ஆர்., கீதா ஜீவன் பதவிக்கு ஆபத்து!

ஸ்டாலின் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தது தென் மாவட்டங்களைத்தான். ஏனென்றால், வட மாவட்டங்களில் கொங்கு அமைச்சர்கள் பண மூட்டையுடன் மிகவும் தீவிரமாக வேலை செய்தார்கள்.


நாடாளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களை குறிவைத்து ஸ்டாலின் செயலாற்றினார். இதில், சாத்தூர் தொகுதியை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும், விளாத்திகுளம் தொகுதியை கீதா ஜீவனும் பொறுப்பு எடுத்துக்கொண்டார்கள்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். சொன்ன கோஷ்குண்டு சீனிவாசனையே சாத்தூர் இடைத்தேர்தல் வேட்பாளராக ஸ்டாலின் நியமித்தார். சீனிவாசன் உண்மையில் சபரீசனின் தேர்வு என்பது தெரியாமல் சாத்தூரார் அசட்டையாக இருந்துவிட்டார். குறிப்பாக, சாத்தூராரின் ரெட்டியார் சமூகத்தினர் அதிகம் உள்ள இடங்களில் மட்டும்தான் தி.மு.க.வுக்கு வாக்குகள் குறைவாக விழுந்துள்ளன.

இதை குறிப்பெடுத்து அனுப்பிவிட்டார் வேட்பாளர். அதேபோல் விளாத்திகுளம் தொகுதி மக்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தில் பாதிக்கும் மேலாக கீதா ஜீவன் சுருட்டி விட்டாராம். இந்த இரண்டு விவகாரங்களும் அறிவாலயத்தில் தெளிவாக புகார் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில், இருவரையும் நேரில் வரவழைத்து விசாரணை நடத்த இருக்கிறாராம் ஸ்டாலின். அப்போது கிடைக்கும் பதிலைப் பொறுத்து, இருவருக்கும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கல்தா கொடுக்கப்படும் என்கிறார்கள்.