இந்திரா சாயலில் வந்தாச்சு பிரியங்கா! ராகுலுக்கு ஆப்பு! அதிர்ச்சியில் மோடி..?

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு முன்னரே பிரியங்காதான் கட்சிப் பொறுப்புக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆனால் சரியான தருணத்தில் களத்தில் குதித்திருக்கிறார் பிரியங்கா. இனி என்ன நடக்கும்?


எப்படியாவது இந்தத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக மெகா கூட்டணி, மெகா போராட்டம் எல்லாம் நடத்திவருகிறது காங்கிரஸ். இந்த நிலையில் உ.பி.யில் காங்கிரஸ் கட்சியை அகிலேஷும், மாயாவதியும் சேர்ந்து கழற்றிவிட்டனர். இதனை பொறுக்கமுடியாத காங்கிரஸ் அதிரடி மூவ் ஒன்று நடத்தியிருக்கிறது. அதுதான் பிரியங்கா காந்தி வருகை. 

சோனியா காந்தியின் மூத்தமகளான பிரியங்காவுக்கு காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய பொதுச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. மேலும், உத்தரப்பிரதேச கிழக்கு பிராந்தியத்தைக் கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. .பி. தேர்தலில் காங்கிரஸ்க்கு மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் ராகுலின் திட்டமாம்.

கடந்த தேர்தலிலேயே பிரியங்காவை களம் இறக்க காங்கிரஸார் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால், அப்போது வதேரா மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை எதிர்க் கட்சிகள் கூறிவந்ததால், தீவிர அரசியலில் இறங்காமல் தவிர்த்தார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் தேர்தல் பிரசாரம் செய்தார்.

இப்போது காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்ட பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே பிரியங்காவை களம் இறக்கியிருக்கிறார்கள். இந்த அதிரடி நடவடிக்கையை முலாயமும், மாயாவதியும் எதிர்பார்க்கவில்லை. அதனால் மீண்டும் கூட்டணி மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.

இதனால் ராகுலின் எதிர்காலம் பாதிக்கப்படுமா... எதிர்காலத்தில் பிரதமர் பதவி வேட்பாளராக இருப்பது யார் என்று காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதனை கண்டுகொள்ளாமல் பிரியங்காவை வரவேற்று பதவி வழங்கியிருக்கிறார் ராகுல்.

’’பிரியங்கா, ஜோதிர்தியா சிந்தியா ஆகிய இருவரும் உ.பி. காங்கிரஸ் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவார்கள். பிரியங்காவும் தேர்தலில் போட்டியிடுவார். .பி.க்கு இப்போது இளைஞர்கள் சக்தி தேவை, அதை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது’’ என்று ராகுல் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

எப்படியோ இந்திரா காந்தி போன்று பிரியங்கா வந்துவிட்டார். அவர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தால் ஓட்டுக்களை அள்ளிவிடலாம் என்று கதர் சட்டைகள் உற்சாகத்தில் துள்ளுகிறார்கள். ராகுல் காந்தியை பப்பு என்று வர்ணிக்கும் பா.ஜ.க.வால் நிச்சயம் பிரியங்காவை விமர்சனம் செய்ய முடியாது. 

பிரியங்கா அதிரடி அரசியல் செய்வார் என்பதால் ராகுலைத் தாண்டி விரைவில் கட்சியில் முக்கிய இடம் பிடிப்பார் என்று சொல்கிறார்கள். பிரியங்காவின் வருகை மோடியையும் அசைத்துப் பார்த்திருக்கிறதாம்.