RSS டவுசருடன் வந்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம்!

பிரியங்கா சோப்ரா தற்போது காக்கி உடையில் வெளிவந்த போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


பிரியங்கா சோப்ரா புகழ்பெற்ற பாலிவுட் நடிகைகளுள் ஒருவராவார். இவர் பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து அந்த படங்கள் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் அமெரிக்காவில் ஹாலிவுட் திரைப் படத்திலும் நடித்து மாபெரும் புகழை அடைந்தார்.

இவர் அமெரிக்கா நாட்டின்  பாடகரான   நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் புரிந்தார். பல நாடுகளுக்கு இருவரும் ஒன்றாக உல்லாசமாக சுற்றி வந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வந்தன.

இதற்கிடையே நியூயார்க் நகரில் தற்போது அவர் காக்கி நிற  ஷார்ட்ஸ் அணிந்து வெளியே சுற்றுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. இதைக் கண்ட நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

நம் நாட்டில்  காக்கி நிற ஷார்ட்ஸை ஆர்எஸ்எஸ் பிரிவினர் அணிவது வழக்கம். ஆதலால் பிரியங்கா சோப்ரா ஆர்எஸ்எஸ் பிரிவில் இணைந்து விட்டதாக ஒரு சில நெட்டிசன்கள் வதந்திகளை பரப்பி உள்ளனர். இன்னும் சிலர் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வெளிநாட்டு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கலாய்த்துள்ளனர்.

மேலும் சிலர் இந்த உடையானது ஆர் எஸ் எஸ் அமைப்பினரின் குடை போன்று கேவலமாக இல்லை என்றும் கூறி கமென்ட் செய்துள்ளனர். ஓர் உடையினால் ஒரு சில மணி நேரத்திலேயே பிரியங்கா சோப்ரா வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகியுள்ளார்.