ஸ்பெசல் கிளாஸ்னு வரச் சொல்லி..10 வயது மாணவியை..! 60 வயது ஸ்கூல் ஓனர்..! கிருஷ்ணகிரி திகுதிகு!

கிருஷ்ணகிரியில் ஐந்தாம் வகுப்பு மாணவியை ஸ்பெஷல் கிளாஸுக்கு வரச்சொல்லி 60 வயதுடைய பள்ளியின் தாளாளர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராயக்கோட்டை சாலையில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த தனியார் பள்ளியை 60 வயது மிக்க குருத் ( பள்ளியின் தாளாளர்) என்பவர் இயக்கி வருகிறார். தனியார் பள்ளியில் கையெழுத்து தொடர்பான பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் கையெழுத்திற்கான சிறப்பு பயிற்சி பெறுவதற்காக 10 வயது மிக்க ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மற்றொரு தனியார் பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் அமைந்திருக்கும் தனியார் பள்ளிக்கு தன் தந்தையுடன் சென்றிருக்கிறார். 

அந்த சிறுமியின் தந்தை அதே பள்ளியில் நடைபெறும் ஜோதிடத்திற்கான சிறப்பு பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்காக சென்றிருக்கிறார். 

சிறப்பு பயிற்சிக்காக வரும் மாணவ-மாணவிகள் அந்த பள்ளியின் தாளாளர் இடம் கையெழுத்து பெறுவது வழக்கம். அந்த வகையில் அந்த ஐந்தாம் வகுப்பு சிறுமியும் பள்ளியின் தாளாளர் அறைக்கு கையொப்பம் பெறுவதற்காக சென்றுள்ளார்.

அந்த பள்ளியின் தாளாளர் குருத் தன்னுடைய அறையில் தனிமையில் இருந்துள்ளார் . அந்த தனிமை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார்.

அச்சத்தில் என்ன செய்வதென்று தெரியாத அந்த சிறுமி மிகவும் அலறி இருக்கிறாள். அவளது அலறல் சத்தத்தை கேட்ட அவரது தந்தை மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக தாளாளர் அறைக்கு சென்றுள்ளனர்.

என்ன நடந்தது என்று சிறுமியின் தந்தை கேட்டபோது தாளாளர் தன்னை மன்னித்து விடுமாறு அவரது தந்தையிடம் மன்றாடி இருக்கிறார். 

இருப்பினும் தாளாளரின் கொடிய செயலை மன்னிக்காத சிறுமியின் தந்தை உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் . தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தாளாளர் குருத் அந்த இடத்தைவிட்டு தப்பி ஓடிவிட்டார் . 

போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் 10 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த பள்ளியின் தாளாளர்-ஐ தீவிரமாக தேடி வருகின்றனர்.