அதிவேகம்! வளைவில் தலைகுப்புற கவிழ்ந்த சொகுசு பஸ்! 21 பேர் பலியான பயங்கரம்! நெஞ்சை உலுக்கும் விபத்து!

சுற்றுலா பயணிகள் சுமார் 70 பேருடன் சென்ற சொகுசு பேருந்து தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.


குஜராத் மாநிலத்தின் பனஸ் கந்தா மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பாஜி நகர் அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள மலைக் கோவிலுக்கு சென்றுவிட்டு சுமார் 70 பேருடன் அந்த பேருந்து திரும்பிக் கொண்டிருந்தது.

அப்போது அம்பாஜி தந்தா சாலையில் சென்று கொண்டிருந்த போது ஒரு வளைவில் வேகமாக பேருந்து திரும்பியுள்ளது. அதிவேகத்தில் திரும்பியதால் ஓட்டுனரால் உடனடியாக பேருந்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால் சாலை தடுப்பில் மோதி பேருந்து அப்படியே தலைகுப்புற கவிழ்ந்தது. வேகமாக சென்று கவிழ்ந்த காரணத்தினால் அந்த வேகத்தில் பேருந்துக்குள் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். உள்ளே இருந்து பயணிகளால் வெளியே வர முடியவில்லை.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து உதவினர். ஆனாலும் கூட பேருந்துக்குள் சிக்கி பலர் உயிரிழந்தனர். முதற்கட்டமாக பேருந்துக்குள் இருந்து 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயத்துடன் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.