முந்தைய தி.மு.க. அமைச்சர்கள் அனைவருக்கும் சிறை உறுதி..! ஜெயலலிதா பாணியில் முதல்வர் இ.பி.எஸ். உத்தரவாதம்

தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா பாணியில் எதிர்க் கட்சியான தி.மு.க.வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் துவம்சம் செய்துவருகிறார். அதற்கு பொதுமக்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்துவருகிறது.


ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட இ.பி.எஸ்., ‘கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், மக்களை சந்திப்பதாக கூறி, கூட்டம் நடத்தினார். மனுக்களை பெற்றார். சட்டசபை தேர்தல் வருவதால், இப்போதும் மனுக்களை பெறுகிறார்.அம்மனுக்களை எங்களிடம் வழங்கினால், நடவடிக்கை எடுத்திருப்போம். மனுவை கிடப்பில் போட்டு, மக்களிடம் பொய் பேசி வருகிறார். டெண்டரே விடாத பணியில் ஊழல் நடந்ததாக, ஸ்டாலின் பேசுகிறார்.

அவர்களது ஆட்சியில் நிகழ்ந்த அமைச்சர்கள் மீதான ஊழல், முறைகேடு வழக்கை விரைந்து முடிக்க, நேற்று முன்தினம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மீது, நான்கு வழக்குகள், பொன்முடி மீது, மூன்று வழக்குகள், நேரு, துரைமுருகன், பன்னீர்செல்வம், தாமோதரன், அன்பரசு மீது தலா, இரு வழக்குகள், சுரேஷ்ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு மீது தலா ஒரு வழக்கு உள்ளது.

இவ்வழக்குகளில், இவர்கள் அனைவரும் விரைவில் சிறை சென்று, களி சாப்பிட உள்ளனர்.உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டாக வாய்தா வாங்கி வந்த நிலை மாறி விட்டதால், விரைவில் முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி.இந்த அரசில் எந்த டெண்டரிலும், யார் வேண்டுமானாலும், 'இ - டெண்டர்' முறையில் விண்ணப்பிக்கலாம்.

கடந்த, தி.மு.க., ஆட்சியில், யாருக்கு டெண்டர் வழங்க வேண்டுமோ, அவருக்கு மட்டும்தான் விண்ணப்பமே தருவர். கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், பேரன்கள் உதயநிதி, தயாநிதி, மகள் கனிமொழி என குடும்பமே ஊழல் செய்ததால், அவர்கள் பெயரில், 58 சொத்துகள் அதிகாரபூர்வமாக உள்ளன‘ என்று பேசி அதரவைத்துள்ளார்.