நாட்டின் பிரதமருக்கே கொரோனா உறுதியானது..! பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்..!

ரஷ்ய நாட்டின் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 2,33,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 33,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது ரஷ்யா நாட்டிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. 

இதுவரை ரஷ்ய நாட்டில் 1,06,498 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 7,099 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை அந்நாட்டில் 1,075 இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே அந்நாட்டின் பிரதமரான மிக்கைல் மிஷூஸ்டினுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருடைய வயது 54. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் அந்நாட்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது‌. வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட உடனே பிரதமர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக அவருடைய அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், நாட்டின் முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கும்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் தன்னுடைய கருத்துக்களை தெரிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மிக்கைல் மிஷூஸ்டினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அறிந்தவுடன், அந்நாட்டு அதிபரான விளாடிமிர் புட்டின் "நிச்சயம் பிரதமர் இந்த நோயிலிருந்து மீண்டு வருவார்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் மீண்டு வரும் வரை அவருடைய அலுவலக பணிகளை துணைப்பிரதமர் பார்த்து கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.