ரஜினி வீட்டு கல்யாணத்திற்கு வருகிறாரா பிரதமர் மோடி?

ரஜினி வீட்டுக் கல்யாணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலுக்கு இழுத்து, அவருடைய கட்சியுடன் கூட்டுவைத்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தோல்விகளையும் சந்திக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் தீராத தாகமாக இருந்தது. இந்த அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாலே ரஜினிகாந்த் மன்றமாக மாற்றும் பணியில் இறங்கினார்.

ஆனால், அதன்பிறகு ரஜினி விவகாரத்தை கண்டுகொள்ளாமல் விடவே, அவரும் மன்றத்தை கட்சியாகப் பதிவு செய்யாமல் இருந்துவிட்டார். மிகவும் நெருக்கடி கொடுத்தால் கட்சியாக மாற்றி தேர்தலில் நிற்கலாம் என்று எண்ணியிருந்தார். மேலும் தமிழக ஆட்சி உங்களுக்கு டெல்லி எங்களுக்கு என்று பேசப்பட்டதால், சட்டசபைத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டார்.

இப்போது ரஜினிகாந்த் இல்லாமல் கூட்டணி அ.தி.மு.க.வுடன் முடிவாகிவிட்டது. ஆனாலும் பா.ஜ.க.வுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. ஏனென்றால் கருத்துக்கணிப்புகள் படி தினகரனுக்கும் நல்ல வாக்குகள் கிடைக்கிறது என்பதால், இது அ.தி.மு.கவின் வெற்றியை பாதிக்கும் என்று உறுதியாகத் தெரிகிறது.

அதனால், இந்த நேரத்தில் அ.தி.மு.க..வை தாண்டியும் ஏதேனும் தேவை என்பதை உணர்ந்திருக்கிறது பா.ஜ.க. வட்டாராம். முன்பு ரஜினி ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது போன்று இப்போது மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் நல்ல மாற்றம் நிகழும் என்று ஆளும் கட்சியும் பா.ஜ.க. தரப்பும் நம்புகிறது.

குரல் கொடுப்பதற்கு மட்டும் அழுத்தம் தருவதற்கு பா.ஜ.க. தமிழக தலைவர்கள் தரப்பில் தயக்கம் நிலவுகிறது. அதனால் ரஜினியே அப்படியொரு வாய்ஸ் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதற்கு வாய்ப்பாக ரஜினி மகள் சௌந்தர்யாவின் இரண்டாவது மகள் திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள்.

இந்த வாரம் 10ம் தேதி திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி. அந்த நேரத்தில் சென்னைக்கு வந்து ரஜினி மகளுக்கு வாழ்த்து தெரிவித்தால் போதும் என்று பா.ஜ..க.வினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி செல்வதை முன்னிட்டு அத்தனை பா.ஜ.க. தலைவர்களும் கல்யாணத்தில் முகாமிட ஆசைப்படுகிறார்கள்.

பா.ஜ.க. பக்கத்தில்தான் ரஜினிகாந்த் இருக்கிறார் என்பதை மட்டும் மக்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்தாலே போதும் என்பதுதான் அவர்களது எண்ணம். இந்தக் கல்யாணத்துக்கு ஸ்டாலின் தொடங்கி திருநாவுக்கரசர், திருமாவளவன் போன்ற பலரும் வருவது உறுதியாகியிருக்கிறது. மேலும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். செல்வார்கள் என்பதால் மோடியும் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

மோடி வரவில்லை என்றால் அமித் ஷா அல்லது நிர்மலா சீதாராமன் போன்றவர்களாவது வந்து ரஜினியை மடக்கவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அவர்கள் திட்டம் நடக்குமா, ரஜினி பணிவாரா என்பதை பார்த்துவிடலாம்.