பிரதமர் மீது முட்டையை வீசிய பெண்மணி! தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு!

நம் நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேப்போன்று ஆஸ்திரேலியா நாட்டிலும் பிரதமர் தேர்தல் நடைப்பெற உள்ளது. இம்மாதம் 18-ஆம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது


ஆஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் என்பவராவார். இவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் ஆஸ்திரேலியாவிலுள்ள அல்பரி மாகாணத்தில் மாரிசன் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்கள் அவருக்கு நல்ல வரவேற்பளித்தனர். பிரச்சாரத்தின் போது அவர் தன் அரசின் சாதனைகளையும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆஸ்திரேலியாவை மேலும் வளர செய்வேன் என்று சூளுரைத்தார்.

பின்னர், பொதுமக்களுடன் உரையாடிய போது எதிர்பாராத விதமாக அவர் மீது முட்டை வீசப்பட்டது.  இந்த மன்னிக்க முடியாத காரியத்தை ஒரு போராட்டக்கார பெண்மணி செய்தது அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உடனே காவல்துறையினர் அவரை கைது செய்ய முற்பட்டபோது முதியவர் ஒருவர் தடுமாறி விழுந்தார். உடனே மாரிசன் அவர்கள் விரைந்து சென்று அந்த முதியவருக்கு உதவினார்.தன் மீது முட்டை வீசப்பட்டதையும் பொருட்படுத்தாமல் முதியவருக்கு உதவியது, அந்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.