சாமி கும்பிட வந்த பெண் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை..! சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதரின் அடாவடி! அதிர வைத்த காரணம்!

நடராஜர் கோவிலில் தீட்சிதர் பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவமானது சிதம்பரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிதம்பரம் மாவட்டத்தில் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெண்ணொருவர் தன்னுடைய குழந்தையின் பிறந்தநாளுக்கு பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்வதற்காக சென்றுள்ளார். முக்குனி பிள்ளையார் சன்னதியில் இருந்த தீட்சிதரிடம் அர்ச்சனை பொருட்களை கொடுத்துள்ளார். பதிலுக்கு தீட்சிதர் அந்த பெண்ணிடம் எந்த ஒரு தகவலையும் கேட்காமல் அவசர அவசரமாக அர்ச்சனை செய்துள்ளார்.

இதனால் வெறுப்படைந்த பெண், "நட்சத்திர விவரங்களை கேட்காமல் எவ்வாறு அர்ச்சனை செய்வீர்கள்" என்று தீட்சிதரிடம் முறையிட்டுள்ளார். ஆத்திரமடைந்த தீட்சிதர் அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்துள்ளார். அதன் பின்னர் "வேண்டுமென்றால் நீயே செய்து கொள்" என்று திமிராக பதில் அளித்துள்ளார். அதற்கு அந்த பெண் "நீங்கள் எதற்கு அப்போ இங்கு இருக்கிறீர்கள்" என்று வாக்குவாதம் செய்துள்ளார். இறுதியில் தீட்சிதர் பெண்மணியிடம் சில தகாத வார்த்தைகளை உபயோகித்துள்ளார்.

இதுகுறித்து கோவிலுக்கு வந்த பொதுமக்கள் தீட்சிதரிடம் முறையிட்டதற்கு, அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. மேலும் பெண்ணுக்கு ஆதரவாக பேசிய அனைவரிடமும் தீட்சிதர் ஆணவ போக்கை கடைபிடித்துள்ளார்.

இந்த சம்பவமானது சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் ஆணவமாக பேசிய தீட்சிதர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் தீட்சிதர் மீது ஃஎப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.