மீண்டும் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர்! திடீரென தொடங்கிய ஏற்பாடு! கண்ணீரில் பக்தர்கள்!

வசந்த மண்டபத்தில் இருந்து காட்சி தரும் ஆதி அத்தி வரதர் இந்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


அதன்பிறகு, பரிகார பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் நீருக்கடியில் வைக்கப்படுவார். அடுத்து 2059-ம் ஆண்டு தான் மீண்டும் பக்தர்களுக்கு காட்சி தர வருவார்.

அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைப்பதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் உள்ள இறை நம்பிக்கை உள்ளவர்களின் ஒரே பேச்சு அத்தி வரதராக தான் இருக்கும். அந்தளவிற்கு அத்தி வரதர் வைபவத்தில், வரதரை பார்த்துவிட மாட்டோமா என பலரும் ஏங்கி வருகின்றனர்.

வரும் ஆகஸ்ட் 16ம் தேதி தான் பக்தர்கள் தரிசனம் செய்ய இறுதி நாள் என்பதால் காஞ்சிபுரத்திற்கு பக்தர்கள் பலர் குவிய தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் அத்தி வரதர் தரிசனம் வரும் 16ம் தேதியுடன் பொதுமக்களின் தரிசனம் முடிந்த பின்னர் 17ம் தேதி அத்தி வரதருக்கு ஆகம விதிப்படி சடங்குகள் செய்யப்பட்டு, அன்று இரவு மீண்டும் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட உள்ளார்.

குளத்தை தூய்மை செய்து தயார் படுத்தும் பணிகள் தொடங்கி உள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அனந்த சரஸ் குளத்தை சுத்தம் செய்யும் முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்க உள்ள தகவல் பக்தர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

தற்போது அத்திவரதரை தரிசித்துவிட்டு அவர் மீண்டும் செல்ல உள்ள குளத்தையும் மக்கள் பார்க்கச் செல்கின்றனர். இதனிடையே 17ந் தேதி தான் இதற்கான ஏற்பாடு துவங்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த ஏற்பாடு தொடங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் மிகவும் உருக்கத்துடன் அதனை பார்த்துச் செல்கின்றனர்.

ஒரு சில பக்தர்கள் உணர்ச்சி மிகுதியில் கண்கள் கலங்கியபடி அங்கிருந்து செல்கின்றனர். வரும் 15ம் தேதியுடன் விஐபி தரிசனம் நிறுத்தப்படும் என்றும், 16ம் தேதி முழுவதும் பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.