கேப்டனை பிரதமராக்குவேன்! ஒரே போடாக போட்ட பிரேமலதா! தெறித்து ஓடிய அதிமுக!

துரைமுருகனால் அவமானப்படுத்தப்பட்ட தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டுமா என்று அ.தி.மு.கவினர் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.


அதனால் இன்று பா.ஜ.க.வை பிரேமலதா தொடர்பு கொண்டபோது, அ.தி.மு.க.வினரை நோக்கி கையைக் காட்டி விலகிக்கொண்டார். அதன்பிறகு அ.தி.மு.கவிடம் பேசியபோது, ‘இப்போது 4 சீட் தரவேண்டுமா என்று யோசிக்கிறோம். தி.மு.க.வினர் ஏற்படுத்திய அவமானத்திற்கு சுதீஷ் சரியாக பதிலடி கொடுக்கவில்லை.

அதனால் தி.மு.க.வை முடிந்தவரை கேவலப்படுத்துங்கள். அதன்பிறகு கூட்டணி பேசலாம் என்று சொல்லப்பட்டதாம். அதனால்தான் பத்திரிகையாளர்களை அழைத்து பிரேமலதா டென்ஷனாகியிருக்கிறார்.

ஆனால் தி.மு.க.வை திட்டவேண்டிய பிரேமலதா, சந்தடிச்சாக்கில் அ.தி.மு.க.வையும் திட்டித்தீர்த்து விட்டார். கேப்டன் ஜெயலலிதாவுக்கே பயப்படாதவர், நாங்கள் கூட்டணிக்குள் வந்தால் எல்லாம் சரியாக நடக்க வேண்டும், எங்களால்தான் அ.தி.மு.க. ஜெயித்தது என்றெல்லாம் அள்ளிவிட, அதிர்ந்து நிற்கிறது அ.தி.மு.க. இனிமேல் இவர்களை கூட்டணிக்குள் வைத்து என்ன பிரயோஜனம் என்று கைகழுவ நினைக்கிறதாம்.

இதனை தெரிந்துகொண்ட பிறகும் பிரேமலதாவுக்கு கோபம் தீரவில்லை. அ.தி.மு.க. இல்லைன்னா என்ன? தனித்தே போட்டியிடுவோம். மோடியா கேப்டனா என்று மோதிப் பார்ப்போம், ஜெயித்தால் கேப்டன் பிரதமர் ஆகிடுவார் என்கிறாராம். 

ஏற்கெனவே தமிழகத்தின் முதல்வர் கேப்டன் என்றுதான் மக்கள்நலக் கூட்டணியை வைத்து எங்களை வேட்டையாடினீர்கள். இப்போது மீண்டும் கேப்டன் பிரதமர் என்று பேசுனா, எங்களை பைத்தியம் மாதிரி பார்ப்பார்களே என்று தே.மு.தி.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிர்ந்து நிற்கிறார்கள்.

அங்க, என்னம்மா சத்தம்..?