சசிகலாவை சந்திக்க நேரம் கேட்கவே இல்லை... தெறிக்கவிட்ட பிரேமலதா

நாங்கள் இப்போதும் அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அறிவித்திருக்கும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.


முன்னதாக விஜய்காந்த் நீண்ட காலத்திற்குப் பிறகு பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் வந்தார். வீடு, சுதீஷ் வீடு மற்றும் கோயம்பேடு அலுவலகத்தில் கொடி ஏற்றிவைத்து பேசினார் விஜயகாந்த். முன்பைவிட தெளிவாக பேசியது கட்சியினரிடம் பெரும் ஆரவாரத்தை உண்டாக்கியது.

சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக சொல்லப்படுவது குறித்து பிரேமலதாவிடம் கேட்கப்பட்டது. உடனே அவர், ‘எந்த செய்தியாக இருந்தாலும் எங்களிடம் கேட்டு தகவல் அறிந்து வெளியிடுங்கள். நாங்கள் சசிகலாவை சந்திக்க நேரம் கேட்கவே இல்லை. நாங்கள் இன்னமும் அ.தி.முக. கூட்டணியில்தான் இருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

இந்த செய்தி அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. ஊழியர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.