ஒருமையில் பேசிய பிரேமலதா! கொதித்து எழுந்த செய்தியாளர்கள்!.

துரைமுருகன் உளறுவாயன், ஸ்டாலின் போல சட்டையைக் கிழிக்க மாட்டோம்.. ஒருமையில் பேசும் பிரேமலதாவுக்கு ஜெயலலிதாவை மிஞ்சிய அகம்பாவம்? டென்ஷனாகிக் கிளம்பிய பத்திரிகையாளர்கள்.


இன்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அப்போது எந்த ஒரு பத்திரிகையாளருக்கும் மரியாதை கொடுக்காமல், நீ, வா, போ, உனக்கு என்று டீல் செய்ததைக் கண்டு அத்தனை பேரும் கொதித்து எழுந்தார்கள். ஆனால், அதே மரியாதையைத்தான் தொடர்ந்தார் பிரேமலதா.

எங்கள் வீடு தேடிவந்த ஸ்டாலினை நாங்கள் மதித்து மரியாதை கொடுத்தோம். ஆனால், துரைமுருகன் பெரிய மனிதனாக நடந்துகொள்ளவே இல்லை என்று டென்ஷனில் கொதித்திருக்கிறார் பிரேமலதா. 

துரைமுருகனை அனகை முருகேசன்  சந்தித்தது தனிப்பட்ட விஷயம் என்று அழுத்திச் சொன்னார். அதைத்தான் அத்தனை பேரும் நம்ப வேண்டுமாம். இன்றைய பிரஸ்மீட்டில் அவர் பேசிய சில பொன்னான செய்திகள். 

* கூட்டணி பற்றி பேச வந்தால்கூட, சீட் இல்லை என்று சொல்லி அனுப்பவேண்டியதுதான, அதுதானே மரியாதை. இப்படி கூட்டி வைத்து அசிங்கப்படுத்தலாமா?

* துரைமுருகன் பேசவில்லை உளறுகிறார். உட்கார்ந்துகொண்டே தூங்குபவர்.

* எங்களுக்கு எப்போது மறுப்பு சொல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்போதுதான் சொல்வோம்.

* வாசலில் காத்துக்கிடந்தாலும் பதில் சொல்ல வேண்டியதில்லை.

* அ.தி.மு.க.வை கேவலமாக திட்டியதில் தவறே இல்லை.

* இன்று அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் தே.மு.தி.க.தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

*ஜெயலலிதாவை எதிர்த்து குரல் கொடுத்தவர் கேப்டன். 

* கிழியாத சட்டையை கிழிச்சது போன்று போட்டோ எடுக்கும் கட்சி அல்ல தே.மு.தி.க.

* அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வரும், அதுவரை காத்திருங்கள்.

* விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

* எங்கள் கட்சிக்கு கொள்கை இல்லை என்று யார் சொல்வது?

* பா.ம.க.வுக்கு முதலில் சீட் கொடுத்ததுதான் பிரச்னை. எல்லோருக்கும் ஒரே நேரத்தில் முடித்திருக்க வேண்டும்.

ஜெயலலிதாகூட பத்திரிகையாளர்களை இப்படி டிரீட் செய்ததில்லை. இந்த அகம்பாவம் உருப்படாதுப்பா என்று டென்ஷனாகிக் கிளம்பினார்கள் பத்திரிகையாளர்கள்.

இதனிடையே பேச்சுவாக்கில் சமஞ்ச பொன்னுனு இருந்தா பொன்னு கேட்டு சிலர் வருவாங்க, அந்த மாதிரி தேமுதிகவுடன் கூட்டணி பேச சிலர் வந்தாங்க என்றும் பிரேமலதா கூறியுள்ளார். ஒரு கட்சியை பெண்ணின் பருவத்தோடு ஒப்பிட்டு பிரேமலதா ஆபாசமாக பேசியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.