குற்றால அருவியில் கும்மாள குளியல்! திடீரென மயங்கிய கர்ப்பிணி! நொடியில் பறிபோன உயிர்! பதற வைக்கும் சம்பவம்!

குற்றாலத்தில் குளித்து கொண்டிருந்த கர்ப்பிணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கும் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் குற்றால அருவி அமைந்துள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். சீசன் நன்றாக இருப்பதால் நேராக கணக்கான மக்கள் குற்றாலத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்

விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் அளவுக்கு அதிகமாக கூட்டம் இருந்தது.  விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை எனும் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவருடைய கணவர் பெயர் சுரேஷ் குமார். இருவருக்கும் இடையே சில மாதங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. காளீஸ்வரி ஒரு மாதத்திற்கு முன்னர் கர்ப்பமானார். 

குற்றாலத்திற்கு தன் கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் குளிப்பதற்காக சென்றார். சிற்றருவியில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். ஒருவழியாக குற்றால அருவியை அடைந்தார். குளித்து விளையாடி கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத வகையில் அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவரை உடனடியாக தென்காசி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு காளீஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் காளீஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் அறிக்கை வெளிவந்த பிறகு அடுத்தகட்ட விசாரணையை காவல்துறையினர் தொடங்க உள்ளனர். இந்த சம்பவமானது குற்றாலம் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.