தெரு நாய்களுக்கு உணவான 6 மாத கர்ப்பிணி! வால்கிங் சென்றவர்களுக்கு நேர்ந்த பதைபதைப்பு சம்பவம்!

நடைப்பயிற்சி சென்ற கர்ப்பிணி பெண்ணை வெறி நாய்கள் கடித்து குதறி கொன்ற சம்பவமானது பிரான்ஸ் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் பாரிஸ். இங்கு எலிசா பிளாஸ்கி என்ற 29 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் 6 மாத கர்ப்பிணியாவார். பாரிஸின் வடக்கு திசையில் ரெட்ஸ் வனப்பகுதி என்ற இடம் அமைந்துள்ளது. 

இந்த வனப்பகுதியில் தன்னுடைய நாயை அழைத்துக்கொண்டு எலிசா நடைபயணத்திற்கு சென்றுள்ளார். அப்போது சில வெறிநாய்கள் தன்னை கொடூரமாக தாக்குவதாக தன்னுடைய கணவருக்கு கால் செய்துள்ளார். விமான நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த கணவர் 45 நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்தை அடைந்தார்.

அங்கு தன்னுடைய மனைவி வெறிநாய்களால் குதறபபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் எலிசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிரேத பரிசோதனை அறிக்கையில் திங்கட்கிழமை மதியம் 1 மணியிலிருந்து 1:30 மணிக்குள், நாய்கள் அவரை குதறியுள்ளன. உயிருடன் இருந்தபோது சில நாய்கள் மட்டுமே கடித்துள்ளன. ஆனால் இறந்த பின்னர் நிறைய நாய்கள் அவருடைய உடலை கடித்து சின்னாபின்னமாக்கி உள்ளன. 

சொந்த நாய் முதலில் கடித்ததா அல்லது வேறு சில நாய்கள் கடித்ததா என்பது குறித்து டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த செய்தியானது பிரான்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது