குழந்தை பிறந்த உடன் கருத்தடை ஆப்பரேசன்..! திடீரென அதிகமான ரத்தப்போக்கு! துடிதுடித்து பலியான ஆசிரியை! ஹாஸ்பிடல் பயங்கரம்!

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தனியார் ஆசிரியை உயிரிழந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் தூசூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ஜனகர் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ரேவதி. ரேவதியின் வயது 32. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இத்தம்பதியினருக்கு கனிஷ்கர் என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் ரேவதி 2-வது முறையாக பிரசவித்தார். நேற்று முன்தினம் அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பிறகு ரேவதிக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நீண்டநேரமாகியும் வேண்டிய மாற்ற ரத்தத்தை மருத்துவமனை நிர்வாகத்தால் தயார் செய்ய இயலவில்லை. மருத்துவர்கள் மிகவும் பொறுமையாக ரேவதியை பரிசோதிக்க வந்தனர். அதுவரை செவிலியர்கள் மட்டுமே ரேவதியை கண்காணித்து வந்தனர்.

அதிகளவில்ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக ரேவதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதனால் ரேவதியின் உறவினர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேவதியின் உடலை நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், பிரேத பரிசோதனையின் போது தாங்கள் அறிவுறுத்தும் மருத்துவரும் உடன் இருக்கவேண்டும் என்றும் கூறினர்.

பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படவேண்டும் என்றும், வீடியோ பதிவிற்கு பின்னர் ஏதாவது குளறுபடிகளை கண்டுபிடித்தால், அவர்களை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ரேவதியின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.