செயற்கையாக கருத்தரித்த கர்ப்பிணிக்கு கொரோனா..! விரட்டியடித்த தனியார் ஹாஸ்பிடல்..! ஆனால் நள்ளிரவில்..? அரசு மருத்துவமனை அதிசயம்!

கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதால் கர்ப்பிணியை தனியார் மருத்துவமனை வெளியேற்றிய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், எழும்பூரில் செயல்பட்டு வரும் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களிலேயே செயற்கை கருத்தரிப்பின் மூலம் கருவுற்றார்.

அவர் சில நாட்களுக்கு முன்னர் நிறைமாத கர்ப்பிணியாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த பெண்ணுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. மருத்துவ நிர்வாகத்தினர் ஈவிரக்கமின்றி நள்ளிரவில் அந்த கர்ப்பிணியை மருத்துவமனையை விட்டு வெளியேற்றியுள்ளது. 

உடனடியாக அந்த கர்ப்பிணியின் கணவர் அவரை அழைத்து கொண்டு, எழும்பூரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்கள் தற்போதைய பாதுகாப்புடன் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். பிரசவம் நன்றாக முடிந்து அந்த பெண் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

கர்ப்பிணி மருத்துவ நிர்வாகத்தினர் தன்னிடம் அன்போடு பழகியதாகவும், தனக்கு நோய்த்தொற்று இருப்பதை அறிந்தும் மருத்துவர்கள் மிகுந்த அரவணைப்புடன் பழகினர் என்றும், பிரசவத்தில் எந்தவித பாதிப்புமின்றி 2 குழந்தைகளை வெளியே எடுத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றியை தெரிவித்து கொள்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவானது மூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.