கொரோனா இருக்கு..! உள்ளே வராதே..! விரட்டி அடித்த 5 மருத்துவமனைகள்! 3 சக்கர வாகனத்திலேயே பிள்ளை பெற்ற கர்ப்பிணி! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

கர்ப்பிணி மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்ததால் முச்சக்கர வாகனத்தில் அவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவமானது கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவருடைய வயது 27. இவர் கர்நாடகா மாநிலம் கோரேபாளையம் என்ற இடத்தில் குடிபெயர்ந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இறந்தவருக்கு சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக அவருடைய தாயார் மற்றும் சகோதரர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவலினால் புது நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பதில்லை என்று கூறி பிரசவம் பார்க்க மறுத்துவிட்டனர்.

அதன் பின்னர் மற்றொரு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கும் இவர்களுக்கு இதே பதில்தான் கிடைத்தது. இதேபோன்று கிட்டத்தட்ட 5 மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண் பிரசவம் பார்ப்பதற்கு முடியாது என்று கூறியுள்ளனர்.

அங்கிருந்து வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது முச்சக்கர வாகனத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அங்கிருந்த தன்னார்வலர் குழு ஒன்றின் உதவியுடன் பெங்களூரு கிம்ஸ் மருத்துவமனையில் பிரசவத்திற்கு பிறகு அந்த பெண் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.