மோட்டார் சைக்கிள் மோதியதால் கர்ப்பிணி பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவமானது தேன்கனிக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணமாகி 8 மாதம்! கணவனுடன் ஆசையாக மோட்டார் சைக்கிளில் ஏறிய நிறை மாத கர்ப்பிணிக்கு ஏற்பட்ட பயங்கரம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே நெமிலேறி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சாந்தகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய வயது 25. இவருடைய மனைவியின் பெயர் தாமரை. தாமரையின் வயது 19. இவ்விருவருக்கும் பெரியோர் முன்னிலையில் 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் தாமரை கருவுற்றார்.
நிறைமாத கர்ப்பிணி என்பதால், சாந்தகுமார் தாமரையை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கிருந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் நெமிலேரி கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, பின்னால் அமர்ந்திருந்த தாமரை எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் தாமரையின் தலையில் படுகாயம் ஏற்பட்டது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தாமரையின் உடல்நிலை தொடர்ந்து மோசமானது. உடனடியாக அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.