பிரசவத்திற்கு சென்ற நிறை மாத கர்ப்பிணி..! ஆட்டோவை நிறுத்தி போலீஸ்காரர் செய்த பகீர் செயல்! நடு ரோட்டில் கதறித் துடித்த பரிதாபம்!

போடியில் பிரசவத்திற்காக நிறைமாத கர்ப்பிணி பெண் சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்தி கர்ப்பிணி பெண்ணையும் அவரது தாயாரையும் சிகிச்சைக்கு செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி அலைக்கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தற்போது நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போடியில் கார்த்திகா என்ற நிறைமாத கர்ப்பிணி பிரசவத்திற்காக தனது தாயாருடன் ஆட்டோவில் சென்று இருக்கிறார். அப்போது நகர காவல்துறை ஆய்வாளர் ஷாஜகான் மற்றும் சார்பு ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் கர்ப்பிணிபெண் சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்தி அவர்களை மருத்துவமனைக்கு செல்லவிடாமல் அலைக்கழித்து உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கர்ப்பிணி பெண் சென்ற ஆட்டோவை அவர்கள் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண் கார்த்திகாவும் அவரது தாயாரும் போடி காவல் நிலையம் முன்பு தனக்கு நியாயம் வழங்க கோரியும் தன்னை ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டு தரக்குறைவான வார்த்தைகளை பேசி சிகிச்சைக்குச் செல்ல விடாமல் அலைக்கழிப்பு செய்த போடி நகர சார்பு ஆய்வாளர் கதிரேசன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த கர்ப்பிணிப் பெண் காவல் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளார். 

போடியில் காவல் நிலையம் முன்பு கர்ப்பிணிப் பெண் கார்த்திகா அவரது தாயாருடன் செய்த முற்றுகை போராட்டம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.