கர்ப்பமாக இருந்த ஆடு பல பேர் முன்னிலையில் ரேப்: குடிகார ஆசாமியின் விபரீத செயல்!

கர்ப்பமாக இருந்த ஆட்டை, குடிபோதையில் பலாத்காரம் செய்த ஆசாமி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபற்றிய செய்தி இந்தியா டுடே பத்திரிகையில் வெளிவந்துள்ளது. பாட்னாவின் புறநகர்ப்பகுதியில் உள்ள பார்ஸா பஜாரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 

அதில், பெண் ஒருவர் அளித்த பேட்டியில், ‘’3 மாதங்கள் கர்ப்பமாக இருந்த எனது ஆட்டை, குடிகார போதையில் இருந்த அந்த நபர் செக்ஸ் உறவு வைத்தார். இதனை அங்கிருந்த உள்ளூர் மக்கள் அனைவருமே பார்த்தனர். அப்போதும், அந்த நபர் தைரியமாக, இந்த காரியத்தைச் செய்தார். அடுத்த நாளே எனது ஆடு பரிதாபமாக இறந்துவிட்டது.

 

  இதுபற்றி நான் போலீசில் புகார் அளித்தேன். அதன்பிறகு, அவரை போலீசார் கைது செய்தனர்,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட நபர் பீகாரில் உள்ள மதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலி ஆவார். சம்பவம் நடந்தபோது, குடிபோதையில் இருந்துள்ளார்.

 

 அந்த வெறியில், 3 மாதம் கர்ப்பமாக இருந்த ஆட்டை பட்டப்பகலில், கதற கதற பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. ‘’இதையடுத்து, அவரை கைது செய்துள்ளோம். இறந்துபோன ஆட்டின் உடலை, பிரேத பரிசோதனைக்காக, கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

 

  பிரேத பரிசோதனை முடிவுகளை பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுள்ளோம்,’’ என்று பார்ஸா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பி.கே.போலா கூறியுள்ளார். பீகாரில், கடந்த 3 ஆண்டுகளாக, மதுவிலக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

 இதனால், பல இடங்களிலும் குடிபோதையில் இத்தகைய மோசமான குற்ற சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.