கோதுமை மாவில் வெடிகுண்டு..! சாப்பிட்ட நிறைமாத கர்ப்பிணி பசுவின் வாய் வெடித்து சிதறியது..! வலியால் துடியாய் துடித்த பரிதாபம்!

இமாச்சல் பிரதேசத்தில் கர்ப்பிணி பசு உண்ட கோதுமை மாவில் இருந்த வெடி குண்டு வெடித்து பசுவின் வாய் வெடித்து சிதறி அது வலியால் துடித்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


கடந்த சில தினங்களுக்கு முன்பாக கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிமருந்து இருந்த அன்னாசிப் பழத்தை உண்டு வலியால் துடி துடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நாடெங்கிலும் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது. வேண்டுமென்றே வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாச்சி பழத்தை யானைக்கு உன்ன தந்து அதனை கொலை செய்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தில் உண்மைப் பின்னணியை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தின் தாக்கம் அதற்கு முன்பாகவே தற்போது மீண்டும் ஒரு புதிய சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஜன்துட்டா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தியில் கடந்த மே மாதம் 26ஆம் தேதி என்று நிறைமாத கர்ப்பிணி பசு ஒன்று பசிக்காக கோதுமை மாவை சாப்பிட்டு இருக்கிறது. அதை சாப்பிட ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கோதுமை மாவில் இருந்த வெடிகுண்டு வெடித்து பசுவின் வாய் ரத்தக் காடாக மாறியுள்ளது. இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த கர்ப்பிணி பசு வலியில் துடிதுடித்து இருந்த பசுவை பார்த்து அங்கு இருந்தவர்களின் நெஞ்சம் பதை பதைத்தது. 

இதுகுறித்து அந்த பகுதி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்தப் பசுவின் உரிமையாளர் இடமும் தீவிர விசாரணை செய்துள்ளனர். அப்போது அவரிடம் கேட்டபொழுது பக்கத்து வீட்டுக்காரர் தான் வெடிகுண்டு நிறைந்த கோதுமை மாவை பசுவுக்கு உண்ண அளித்திருக்க வேண்டும் என்று சந்தேகித்து கூறியிருக்கிறார். ஏனெனில் பசு அவர்களது விவசாய நிலத்தை சேதப்படுத்துகிறது என்பதற்காக கர்ப்பிணி பசுவைக் கொலை செய்திருக்க அவர் எண்ணியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார். 

பசுவின் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கான உண்மை காரணங்களையும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து வாயில்லா ஜீவன்களின் மீது இம்மாதிரியான அரக்கத்தனமான செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.